LATEST NEWS
திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்தா?…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க ரவீந்தர் மனைவி மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம்….!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
மறுபக்கம் மகாலட்சுமி சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார். அது மட்டுமல்லாமல் பல விளம்பரங்களையும் செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். திருமணம் முடிந்த கையோடு இவர்களின் திருமணம் விமர்சிக்கப்பட்டாலும் தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
அதேசமயம் விடுமுறை நாட்களில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதி தங்களின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம்.சமீபத்தில் ரவீந்தர் தனியாக நின்றுள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே, ஏனென்றால் அவர்கள் உங்களின் வருத்தங்களில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று ஒரு பதிவை பகிர்ந்தார்.
இந்த பதிவை தொடர்ந்து ரவீந்தர் மனைவியை பிரிய உள்ளார் மற்றும் விவாகரத்து என பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகாலட்சுமி தனது கணவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
