அவருக்கு மட்டும் கல்யாணம் ஆகலைன்னா அதை நான் பண்ணி இருப்பேன்… பகத் பாசில் குறித்து மனம் திறந்த நடிகை ரவீனா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அவருக்கு மட்டும் கல்யாணம் ஆகலைன்னா அதை நான் பண்ணி இருப்பேன்… பகத் பாசில் குறித்து மனம் திறந்த நடிகை ரவீனா..!!

Published

on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வடிவேலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசிலுக்கு ஜோடியாக டப்பிங் ஆர்டிஸ்ட் நடிகையுமான ரவீனா ரவி நடித்திருந்தார்.

Advertisement

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், பகத் பாசிலுடன் கட்டிப்பிடிக்கும் காட்சி பற்றி பகிர்ந்துள்ளார். அதாவது கட்டிப்பிடிக்கும் போது பகத் சட்டையில் லிப்ஸ்டிக் பட்டு விட்டது. ஆனால் நான் முத்தம் கொடுக்கவில்லை. இதைப் பார்த்து படபிடிப்பிலிருந்து அனைவரும் கிண்டல் அடித்தனர். பகத் பாசிலுக்கு உண்மையில் திருமணம் மட்டும் ஆகவில்லை என்றால் கூட நான் முத்தம் கொடுத்து இருப்பேன் என வெளிப்படையாக ரவீனா பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in