LATEST NEWS
அம்மாடியோ இத்தனை கோடியா?…. ஹைதராபாத்தில் பெரிய வீடு வாங்கிய நடிகை சமந்தா…. விலை எவ்வளவு தெரியுமா..??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு திரும்பினார். இவரின் நடிப்பில் இறுதியாக சாகுந்தலம் என்ற திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் படம் அந்த அளவிற்கு வசூல் பெறவில்லை. தற்போது அவர் விஜய் தேவரகொண்டா உடன் குஷி திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே விவாகரத்திற்கு பிறகு தனது பெற்றோர் வீட்டில் சமந்தா வசித்து வந்த நிலையில் தற்போது 100 கோடி மதிப்பு கொண்ட அந்த வீட்டிற்கு கூடுதல் பணம் சமந்தா செலுத்தியதாகவும் இதனால் வீடு அவரிடம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள ஜெயப்பேரி ஆரஞ்சு கவுண்டி பகுதியில் கடற்கரையை ஒட்டி 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய மூன்று படுக்கையறை கொண்ட புதிய வீட்டை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் 7.8 கோடி மதிப்புள்ள இந்த வீடு 7944 சதுர அடியுடன் 13 வது தளத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
