LATEST NEWS
“இந்த மனசு யாருக்கு வரும்?”…. கணவர் இறந்த ஒரே வாரத்தில் மனோபாலாவின் மனைவி செய்த நெகிழ்ச்சி செயல்…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் மனோபாலா. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யனாக அவரின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர்தான் மனோபாலா. அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.
69 வயதாகும் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன் பிறகு திரை பணிகளை கவனித்து வந்த மனோபாலா கல்லீரல் பாதிப்பால் கடந்த 15 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் மனோபாலா தனது வீட்டில் காலமானார். அவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மனோபாலாவின் மனைவி உஷா தனது கணவர் இறப்பிற்கு பிறகு அவர் பயன்படுத்திய வாட்சை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்து துணி உள்ளிட்ட பொருட்களை அனாதை இல்லத்திற்கு கொடுத்துள்ளார்.
பொதுவாக மனோபாலாவின் வழக்கத்தில் இறந்த பிறகு அவர் பயன்படுத்திய துணிகளை எரித்து விடுவது வழக்கம். ஆனால் அதற்கு மனம் இல்லாமல் மனோபாலாவின் மனைவி உஷா இத்தகைய செயலை செய்துள்ளார். அவரின் இந்த செயல் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
