LATEST NEWS
அட நடிகை வனிதாவின் மகனா இது?… ஆள் அடையாளம் தெரியாம ஹீரோ மாதிரி வளர்ந்துட்டாரே… லேட்டஸ்ட் புகைப்படம்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவ்வாறு திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் இரண்டு முறை விவாகரத்து செய்து பிரிந்தார்.
தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த இவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வரும் வனிதா இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதே சமயம் யூட்யூபிலும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில் தனது வேலையில் பிசியாக இருந்து வரும் வனிதா கடந்த ஆண்டு தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஒரு பதிவை பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவில் பார்த்து நீங்கள் வனிதா மகன்தான் அம்மா மாதிரியே இருக்கீங்க என ரசிகர்கள் கூறியதற்கு வனிதாவின் மகன் நான் அல்ல ஆகாஷின் மகன் என்று ஸ்ரீஹரி பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது ஸ்ரீஹரி தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
