“2 முறை தற்கொலை செய்ய முயற்சித்தேன்”… ஆனால், பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய காதல் பட நடிகை சரண்யா…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“2 முறை தற்கொலை செய்ய முயற்சித்தேன்”… ஆனால், பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய காதல் பட நடிகை சரண்யா…!!

Published

on

தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான  காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்தவர் தான் நடிகை சரண்யா நாக். இவர் காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு துல்லுற வயது என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் டென்த் கிளாஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

Advertisement

தமிழ் சினிமாவில் சரண்யா 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படத்தில் 5 பெண்களில் ஒருவராக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் இறுதியாக கலந்த 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், குழந்தை பருவத்தில் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பலரும் தன்னிடம் தப்பாக நடந்து கொண்டனர். அப்போது அதனை தடுக்கும் தைரியம் எனக்கு கிடையாது. அம்மா சரி இல்லை என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் பேசுவார்கள். ஆனால் என் அம்மாவுக்கு இது போன்ற பிரச்சனை நடந்துள்ளது. வாழ்க்கையில் தப்பே செய்தது இல்லையா, செய்து அதில் இருந்து மீண்டு வந்தது இல்லையா என்று கேட்டால் அனைவருக்கும் வாழ்க்கையில் கட்டாயம் ஏதாவது ஒரு பிரச்சனையும் இருக்கும் கட்டாயம் ஒரு தப்பும் செய்திருப்பார்கள்.

Advertisement

 

சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நமக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் வந்துவிடும். அனைத்தையும் நம்மால் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருக்கும். ஆனால் முறையாக எதையும் செய்யாததால் தோல்வியை சந்தித்த பிறகு அடுத்தடுத்த தோல்விகளால் மனம் துவண்டு போகும். தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணமும் மனதில் வரும். நானும் இரண்டு முறை தற்கொலை செய்ய முயற்சி செய்து உள்ளேன். அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்த்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு பேப்பரில் நியூஸ் மட்டும் தான் வரும்.

Advertisement

அதன் பின்னர் எல்லாம் மறந்து போகும். வாழ்வதற்கான தைரியம் என்னிடம் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து துணிச்சலாக இருந்தால் நம்முடைய வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொள்ள முடியும். உங்களால் மட்டுமே உங்களின் வாழ்க்கையை சிறப்பாக காப்பாற்றிக் கொள்ள முடியும். வாழ்க்கை மாறவே மாறாது இறுக்கமாக இருந்தால் அதையெல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள். ஒரு நாள் கட்டாயம் வாழ்க்கை அழகாக மாறும் என்று அவர் தன்னம்பிக்கையுடன் பல பெண்களுக்கு உதாரணமாக பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in