இந்த சிறு வயது புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் நடிகை யார் தெரியுமா?… அட இவர்தானா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த சிறு வயது புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் நடிகை யார் தெரியுமா?… அட இவர்தானா..!!

Published

on

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான இவர் காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது.பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய நடிகரின் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார். அவ்வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார்.

Advertisement

இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்த சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவானியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்தானா என ஆச்சரியமாக பார்த்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in