LATEST NEWS
நடிகை சினேகா வீட்டு செல்ல பாடகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா.
இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.
அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.
இதனிடையே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அரவிந்த். இவரின் பாடல்கள் அனைத்தும் சினேகாவின் அக்கா சங்கீதாவிற்கு மிகவும் விருப்பமானவை.
அதனால் சினேகாவின் வீட்டில் எந்த விசேஷங்கள் நடைபெற்றாலும் கட்டாயம் இவரின் பாடல் தான் இடம் பெற்றிருக்கும்.
அதனைப் போலவே சினேகாவின் நண்பர்களின் வீட்டிலும் விசேஷங்கள் நடக்கும் போது அரவிந்த் சென்று பாடுவது வழக்கம். இதனால் சினேகாவின் குடும்பத்திற்கு மிக நெருங்கிய உறவினராக மாறிவிட்டார் அரவிந்த்.
தற்போது இவர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ள நிலையில் அவருக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக சினேகா மற்றும் அவரை நண்பர்கள் அனைவரும் அரவிந்த் வீட்டிற்கு நேரில் சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
