துளி மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட சுஜா வருணி… எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

துளி மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட சுஜா வருணி… எப்படி இருக்காங்கனு நீங்களே பாருங்க..!!

Published

on

நடிகையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டு மருமகளும் தான் சுஜா வருணி. இவர்  பிளஸ்-2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கஸ்தூரிமான், மிளகா, அடாவடி, எங்கள் ஆசான் மற்றும் இந்திரலோகத்தில் நா அழகப்பன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இப்படங்கள் அனைத்தும் இவருக்கு வெற்றியைத் தேடித் தந்த நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ஆன சிவாஜி தேவ் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது சுஜா மற்றும் சிவாஜி தேவ் தம்பதியினருக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார்.

Advertisement

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் சத்ரு என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு சுஜா வருணி அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. பின்னர் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ஏழு வருடங்களுக்கு முன்பு துளியும் மேக்கப் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in