40-வது பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடி அசத்திய நடிகை திரிஷா…. வெளியான புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

40-வது பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடி அசத்திய நடிகை திரிஷா…. வெளியான புகைப்படங்கள்….!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர்.

இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Advertisement

அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

படத்தில் இளவரசி குந்தவை ஆக நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார். தற்போது அவர் விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திரிஷா நேற்று தனது 40 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

அதேசமயம் லியோ படபிடிப்பில் திரிஷா மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை லியோ பட குழு வெளியிட்டு இருந்தது.

40 வயதாகியும் தற்போது வரை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

Advertisement

இதனிடையே 40 வயதை தொட்ட திரிஷா இன்னும் 18 வயது பெண் போலவே காட்சியளிக்கிறார்.

இவ்வளவு அழகா இருக்க என்ன காரணம் என்று பலரும் த்ரிஷாவிடம் டிப்ஸ் கேட்டு வருகிறார்கள்.

Advertisement

இதனைத் தொடர்ந்து த்ரிஷா நேற்று தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய நிலையில் அவரின் பிறந்த நாளில் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in