“மிக எளிமையாக நடைபெற்ற திருமணம், Twins குழந்தைகள்”…. ஆடுகளம் நடிகர் முருகதாஸின் திருமண புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மிக எளிமையாக நடைபெற்ற திருமணம், Twins குழந்தைகள்”…. ஆடுகளம் நடிகர் முருகதாஸின் திருமண புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அதன்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆடுகளம் முருகதாஸ். அந்த படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்து விட்டார். அதேசமயம் ஒரு படத்திலும் கதாநாயகனாக இவர் நடித்திருந்தார்.

 

Advertisement

முருகதாஸ் தனது வாழ்க்கை பயணத்தை நாடகங்கள் மூலம் தான் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கிய தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்தார். இந்த திரைப்படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

 

Advertisement

 

இருந்தாலும் இந்த திரைப்படங்களை விட முருகதாஸை மிகப்பெரிய பிரபலமாகியது என்றால் அது 2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் தான் .

Advertisement

இந்த திரைப்படம் பெரிய அளவில் சூப்பர் ஹிட் கொடுத்தது.இந்த திரைப்படத்தில் தனுஷ் நண்பராக முருகதாஸ் நடித்திருந்ததால் இவர் மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.

அதன் பிறகு முகமூடி, இது கதிர்வேலன் காதல் மற்றும் குட்டி புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விசாரணை திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Advertisement

மேலும் கடந்த வருடம் நயன்தாரா நடிப்பில் வெளியான O2திரைப்படத்திலும் இவர் பஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இப்படி பிசியான நடிகரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளன.

அதாவது ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிறந்தனர். தற்போது நடிகர் முருகதாஸின் அழகிய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in