LATEST NEWS
பாலைவனத்தில் உல்லாசமாக ஆட்டம் போட்டு…. வீடியோ வெளியிட்ட அஜித் மச்சினிச்சி ஷாமிலி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர்தான் நடிகை ஷாலினி.என் அம்மு குட்டி அம்மாவின் க்யூட் குழந்தையாக அறிமுகமான இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஹீரோயினியாக களமிறங்கினார். பின்னர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஷாலினி சினிமாவை ஓரம் கட்டினார்.
இவரைப் போலவே இவரது தங்கை ஷாமிலியும் ஒரு நடிகை தான். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு ரகுவரன் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் பேபி ஷாமிலி அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் மலையாள உள்ளிட்ட பல மொழி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார்.
அக்காவுக்கு பதில் நடிப்பில் ஆர்வம் காட்டி வீரசிவாஜி உள்ளிட்ட படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிப்பை விட்டு ஓவியக்கலையில் ஆர்வம் காட்டி ஓவியம் வரையவும் படிக்கவும் சென்றுவிட்டார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அவ்வகையில் தற்போது பாலைவனத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
