அட அஜித் பட நடிகை மந்த்ரா இது?… உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட அஜித் பட நடிகை மந்த்ரா இது?… உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே…!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்களில் ஒருவர் தான் நடிகை மந்த்ரா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழில் அஜித் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

இவர் தமிழில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்த பிரீமியம் என்ற திரைப்படத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த லவ் டுடே மற்றும் அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இப்படி பிசியான நடிகையாக திகழ்ந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

Advertisement

இவர் தெலுங்கு உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வசித்து வந்தார். மேலும் திருமணத்திற்கு பிறகு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில வருடங்களாக இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு படு குண்டாக இருந்த மந்த்ரா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது அவர் ஒரு விளம்பரத்திற்காக சென்னை வந்துள்ள நிலையில் சுத்தமாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார். அதாவது உடல் எடை குறைத்து அவர் ஸ்லிம்மாக மாறி உள்ளார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in