அய்யோ இவருக்காக இப்படி ஒரு நிலைமை?…. கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு பின் ஒல்லியாக மாறிய நடிகர் பாலா….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அய்யோ இவருக்காக இப்படி ஒரு நிலைமை?…. கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு பின் ஒல்லியாக மாறிய நடிகர் பாலா….!!!

Published

on

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் தான் பாலா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்தத் திரைப்படத்தில் இவர் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் உடன் பிறந்த தம்பி. இந்நிலையில் பாலாவிற்கு சமீபத்தில் கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாலா தனது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடியுள்ளார்.

Advertisement

அதன் பிறகு ரசிகர்களிடம், உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் தற்போது நான் மீண்டு வந்துள்ளேன். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்று உள்ளது. இந்த சிகிச்சையின் போது என்னுடைய உயிர் கூட போகலாம். ஆனால் உங்களின் பிரார்த்தனையால் பிழைத்துக் கொள்ள நிறைய வாய்ப்புள்ளது என உருக்கமாக பாலா கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சில சிகிச்சைகளை பெற்று வருகிறார். தற்போது தனது மனைவி எலிசபத்துடன் சிரித்தபடி புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் உடல் எடை குறைந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in