சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் திரை பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்ட…. அம்பரீஷ் – நடிகை சுமலதா மகனின் திருமண புகைப்படங்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் திரை பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்ட…. அம்பரீஷ் – நடிகை சுமலதா மகனின் திருமண புகைப்படங்கள்…!!

Published

on

ரெபெல் ஸ்டார் அம்பரீஷ் மற்றும் நடிகை சுமலதா ஜோடியின் மகனான அபிஷேக் அம்பரீஷ் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

சுமலதாவின் மகனான அபிஷேக் அம்பரீஷ் ஆடை வடிவமைப்பாளரான அவிபா பிடாவா என்பவரை மணம் முடித்துக் கொண்டார்.

Advertisement

இவர்களின் திருமணம் நேற்று காலை 9:30 மணி அளவில் பெங்களூரில் உள்ள சாம்ரவஜ்ரா என்ற அரண்மனை மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அபிஷேக் அம்பரீஷ் நீண்ட நாட்களாக அவிவாவை காதலித்து வந்த நிலையில் திருவிட்டார் சம்மதத்துடன் கவுடா பாரம்பரிய முறைப்படி திருமணம் முடித்தார்.

Advertisement

இவர்களின் திருமணத்தில் ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.

அதன்படி முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரான நடிகர் அம்பரீஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.

இவர் ரஜினியுடன் இணைந்து தாய் மீது சத்தியம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

Advertisement

அதனைப் போலவே அம்பரீஷ் மனைவி நடிகை சுமாலதா ரஜினியுடன் முரட்டுக்காளை என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்ற பிரம்மாண்டமாக நடந்து முடிந்த அம்பரீஷ் மற்றும் நடிகை சுமலதா தம்பதியின் மகன் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in