அம்மாடியோ இத்தனை கோடியா?…. விஜய் வீட்டின் அருகே புதிய வீட்டை வாங்கிய பிரபல நடிகை…. அவர் யார் தெரியுமா….???? - cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ இத்தனை கோடியா?…. விஜய் வீட்டின் அருகே புதிய வீட்டை வாங்கிய பிரபல நடிகை…. அவர் யார் தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். விஜய் சென்னை நீலாங்கரையில் வசித்து வருவதை அனைவரும் அறிந்திருப்போம்.

இந்நிலையில் விஜயின் வீட்டின் அருகே 35 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமான புதிய வீடு ஒன்றை நடிகை திரிஷா வாங்கியுள்ளார். ஏற்கனவே அஜித்தின் வீட்டின் அருகே 5 கோடி மதிப்பில் பிளாட் ஒன்றை அவர் வாங்கி இருந்த நிலையில் தற்போது விஜயின் வீட்டின் அருகே புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக புதிய செய்தி வெளியாகி உள்ளது. அதே சமயம் தளபதி 67 திரைப்படத்தில் திரிஷா பல வருடங்களுக்குப் பிறகு ஜோடியாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Continue Reading
Advertisement