LATEST NEWS
அட அப்படியே நடிகை சௌந்தர்யா போலவே இருக்காங்களே?…. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…..!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் இருந்தவர்தான் நடிகை சௌந்தர்யா. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி,கமல் மற்றும் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பொன்மணி,படையப்பா மற்றும் காதலா காதலா உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிசியாக திரைப்படங்களில் நடித்து வந்த சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரின் எதிர்பாராத மரணம் திரை உலகிற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அச்சுவாசல் நடிகை சௌந்தர்யா போலவே இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
