LATEST NEWS
குடும்பத்துடன் எளிமையாக மகனின் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்…. வைரலாகும் புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் நடிகர் விஜயகுமாரின் மகன்தான். ஆரம்பத்தில் இவரின் படங்கள் ஹிட் கொடுக்காத நிலையில் அடுத்தடுத்த இவரின் நடிப்பில் வெளியான பல படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பின்னர் இவரின் திரைப்படங்கள் ஹிட் ஆகாத காரணத்தால் நடிப்பில் இருந்து ஒதுங்கி தயாரிப்பு பணிகளில் ஈடுபட அவரின் குடும்பம் வலியுறுத்தியது.
இதனால் தயாரிப்பு பணிகளில் ஈடுபட முடிவு செய்து அருண் விஜய் நடிகர் விஜய்யை பார்த்துள்ளார்.
அப்போது விஜய் ஊக்கப்படுத்தியதன் காரணமாக மீண்டும் நடிப்பிற்கு வந்ததாக அருண் விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அந்த படம் அமைந்தது.
அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது இவர் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அருண் விஜய் தனதுமகனிணி பிறந்த நாளை வீட்டில் தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாக தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவர் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
