36-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய மாநகரம் நடிகர் சந்தீப் கிஷன்…. வெளியான புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

36-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய மாநகரம் நடிகர் சந்தீப் கிஷன்…. வெளியான புகைப்படங்கள்….!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சந்தீப் கிஷன். இவர் தெலுங்கு சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் யாருடா மகேஷ், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் மாயவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் தற்போது இரண்டு தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். சென்னையில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்த இவர் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு மற்றும் ஷியாம் கே. நாயுடு ஆகியோரின் மருமகன் ஆவார்.

இவர் கலந்த 2008 ஆம் ஆண்டு திரைப்படத் தொழிலை தொடங்குவதற்காக ஹைதராபாத் சென்றார்.

Advertisement

சினேகா கீதம் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு கௌதம் வாசுதேவ் மேனன் இடம் உதவி இயக்குனராக ஒரு வருடம் பணியாற்றினார். இவர் முதன்முதலில் யாருடா மகேஷ் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கசடதபற, கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

அதேசமயம் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களிலேயே அதிகமாக நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அதேசமயம் கொரோனா சமயத்தில் உடற்பயிற்சி மூலமாக தனது உடல் எடையை அதிகம் குறைத்த இவர் 12 கிலோ எடை குறைத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Advertisement

ஒவ்வொரு சாம்பியனும் ஒரு காலத்தில் தோல்வியாளராக இருந்தாலும் விடாமுயற்சியுடன் இருந்தவர்கள் தான் என்று இவர் குறிப்பிட்டு இருந்தார். இவர் ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகள் கிடைத்தது.இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் சமீபத்தில் இவர் தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in