LATEST NEWS
உயரிய விருதான தேசிய விருது பெற்ற தமிழ் நடிகைகள் யார் யார் தெரியுமா?…. இதோ முழு பட்டியல்…!!
தென்னிந்திய சினிமா துறையில் இந்திய அரசால் கவுரவிக்கப்படும் உயர்ந்த விருதுதான் தேசிய விருது. இது இந்தியாவின் உயர்ந்த விருதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பை 1967 ஆம் ஆண்டு இந்திய அரசு தொடங்கிய நிலையில் சிறந்த நடிகர் நடிகைகளை தேர்வு செய்து ஒவ்வொரு வருடமும் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகைகள் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
நடிகை லட்சுமி:
தமிழ் சினிமாவில் 70களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் லட்சுமி. இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் ஆக வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கடந்த 1976 ஆம் ஆண்டு நடிகை லட்சுமி பெற்றார்.
நடிகை சோபா:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஷோபா தனது 17 வயதிலேயே தேசிய விருது பெற்றார். இயக்குனர் துரை இயக்கத்தில் வெளியான பசி திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. நடிகை லட்சுமிக்கு அடுத்தபடியாக மூன்று வருடங்களுக்குப் பிறகு 1979 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார்.
நடிகை சுகாசினி:
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் சுகாசினி. இவர் கே பாலசந்தர் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் வெளியான சிந்து பைரவி திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அந்த திரைப்படத்திற்காக சுகாசினிக்கு 1985 ஆம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது.
நடிகை அர்ச்சனா:
இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான வீடு திரைப்படத்தில் ஒரு வீட்டை கட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஒரு சாதாரண நடுத்தர குடும்பப் பெண்ணின் உணர்ச்சிகளை கொண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக அர்ச்சனாவிற்கு 1987 ஆம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது.
நடிகை பிரியாமணி:
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் பிரியாமணி. அதனைத் தொடர்ந்து அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கிராமத்து சாயலில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது 2007 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
நடிகை சரண்யா பொன்வண்ணன்:
தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் கதாநாயகியாக திகழ்ந்த இவர் தற்போது அம்மா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் இவர் தைரியமான அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கடந்த 2010 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
நடிகை ஸ்ரீதேவி:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் அதிக திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் ஹிந்தியில் வெளியான மாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
நடிகை கீர்த்தி சுரேஷ்:
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மகாநதி திரைப்படத்திற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
நடிகை அபர்ணா பால முரளி:
தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை அபர்ணா பாலமுரளி சூர்யா நடிப்பில் வெளியான சூரறைப் போற்று என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கலந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
