முதல் முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா – சாயிஷா ஜோடி…. அப்படியே அம்மா போல இருக்காங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதல் முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா – சாயிஷா ஜோடி…. அப்படியே அம்மா போல இருக்காங்க….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான குத்து சண்டையை மையப்படுத்திய சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வெற்றியை தேடி தந்தது. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை சாய்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சாய்ஷா வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அவரைத் தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் மற்றும் காப்பான உள்ளிட்ட திரைப்படங்களை நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்களின் செல்ல மகளுக்கு தூய்மை என்ற பொருள் கொண்ட அரியனா என அழகான பெயரை சூட்டியுள்ளனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து ஆர்யா படங்களில் பிசியாக நடித்து வர மறுபக்கம் சாயிஷா குழந்தையை கவனித்துக் கொள்வதில் முழு கவனம் செலுத்திக்கொண்டு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.  இந்நிலையில் தற்போது தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தங்களின் மகளை அறிமுகம் செய்கிறோம் என சாயிஷா கூறியுள்ளார். அவரின் மகளின் புகைப்படத்தை முதன்முதலாக பதிவிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/sayyeshaa/status/1601819925114286081

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in