LATEST NEWS
பாக்கியலட்சுமி சீரியலில் நியூ என்ட்ரி கொடுத்த பிரபல காமெடி நடிகர்… யார் தெரியுமா?.. வெளியான புகைப்படம்…!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தாங்கி ஒரு குடும்பத் தலைவி எவ்வாறு ஒரு குடும்பத்தை கட்டி காக்கிறார் என்பதை மையமாகக் கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இதில் பாக்யா கோபியை விவாகரத்து செய்ததிலிருந்து கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது ஒரே மாதத்தில் 18 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்கிறேன், நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விட வேண்டும் என பாக்யா கோபியிடம் சவால் விடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது பாக்யாவிற்கு பெரிய காண்ட்ராக்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதற்காக ஒரு கல்யாணத்திற்கு அவர் சென்று உள்ள நிலையில் அங்கு காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் வென்கி என்ற நடிகர்கள் நியூ என்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்கள் இடம்பெறும் காட்சி இன்று ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
