“தந்தை இறந்து ஒரு மாதம் கூட ஆகல”… குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் தாமரை… கொந்தளிக்கும் ரசிகர்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தந்தை இறந்து ஒரு மாதம் கூட ஆகல”… குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் தாமரை… கொந்தளிக்கும் ரசிகர்கள்…!!

Published

on

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தெருக்கூத்து கலைஞர் தாமரைச்செல்வி தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய இவர் தனக்கு ஏகப்பட்ட குடும்ப பிரச்சனை மற்றும் கடன்கள் இருந்தும் பிக் பாஸ் வழங்கிய பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லாமல் மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

பிக் பாஸ் விளையாட்டை கில்லி போல் விளையாடினார்.பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இல்லாமல் வெளியே வந்த தாமரைச்செல்வி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் நடனமாடி ஃபைனல் வரை சென்றார். இந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியலில் இவர் நடித்து வருகிறார்.

Advertisement

இவரின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த செய்தியை தாமரைச்செல்வி மிகுந்த சோகத்துடன் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தாமரை தற்போது நடனமாடும் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தந்தை இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இப்படி ஒரு ஆட்டம் போட்ட தாமரைச்செல்வியை பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in