VIDEOS
என்ன போறவங்க வறவங்க எல்லாம் அந்த மாதிரி பேசுறாங்க…. பாக்கியலட்சுமி ரேஷ்மா வெளியிட்ட வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா பசுபுலடி தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும்.
அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து பிரபலமாகி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் பேசிய ரேஷ்மா தான் கொஞ்சம் தற்போது குண்டாகி விட்டதாகவும் அதனை போறவங்க வரவங்க எல்லாம் சொல்லி கிண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார். தனக்கு உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என யாரும் யோசிப்பதில்லை. அதை ஒவ்வொருவரிடமும் கூறிக்கொண்டு இருக்க முடியாது. அதனால் எல்லோரிடமும் கொஞ்சம் kindness உடன் இருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.
https://www.instagram.com/p/CtcPs61LjwK/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
