LATEST NEWS
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் பிரபலம் ஜி.பி முத்து…. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி….!!!
டிக் டாக் மூலம் பிரபலமடைந்து இன்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் ஜி பி முத்து. தூத்துக்குடி மாவட்டம் அருகே உடன்குடி அருகே வெங்கடாசலப்புரத்தை சேர்ந்த இவர் காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டிக் டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயல்களில் வீடியோ பகிர்ந்து வந்தார்.
இவரின் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் பலரும் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அடைப்பை வருவதையும் அதனை அவர் பிரிக்கும் போது எடுக்கும் வீடியோக்களும் வைரலாகி வரும். இப்படி வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வந்த இவருக்கு பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் அஜித் நடிப்பில் வெளியான முடிவு திரைப்படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புகைப்படம் ஒன்றை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் இவருக்கு திடீரென என்ன ஆனது இப்போ எப்படி உள்ளார் என கேட்டு வருகிறார்கள்.
