LATEST NEWS
பிக்பாஸ் பிரபலத்தின் மகளை தூக்கி கொஞ்சிய விஜய்…. இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் முழுக்க குடும்ப பாசத்தை கொண்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ் ராஜ்,யோகி பாபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கணேஷ் வெங்கட்ராமன் நடித்துள்ளார். குடும்பத்துடன் விஜயின் வாரிசு திரைப்படத்தை பார்த்து உள்ள கணேஷ் வெங்கட்ராமனுக்கு விஜயை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அவரின் மகளை தூக்கி விஜய் கொஞ்சம் உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
