பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது பிக் பாஸ் சீசன் 6….. வீட்டினுடைய செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது பிக் பாஸ் சீசன் 6….. வீட்டினுடைய செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?….!!!!

Published

on

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது படுஜோராக ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே ஐந்து சீசன்களை பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ளது. இந்த ஐந்து சீசன்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருந்தது. தற்போது ஆறாவது சீசனில் கலந்து கொள்ள பிரபலங்கள் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான்.

அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் ஜி பி முத்து. இவரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். வந்த நாள் முதலே இவர் செய்யும் காமெடிகள் அனைத்தும் செம வைரலா கி வந்தது. முதல் நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது. அதில் ஜி பி முத்துவின் அட்ராசிட்டி காட்டப்பட்டுள்ளது.

Advertisement

இனி அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போவது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். இந்த நிலையில் கடந்த ஐந்து சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் வீடு பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் பார்த்த நாம் அனைவரும் இவ்வளவு பிரம்மாண்டமா என்று வியந்தோம். இந்த வீட்டிற்கான பிக் பாஸ் குழு எவ்வளவு செலவு செய்துள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வீட்டிற்க்காக மட்டுமே பிக் பாஸ் குழு ரூபாய் 75 லட்சம் செலவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் ஒரு சாதாரணமான செட்டுக்கு 75 லட்சமா என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in