VIDEOS
இலங்கையில் ஜாலியாக ஊர் சுற்றும் பிக்பாஸ் ரச்சிதா…. அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ….!!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளின் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர்தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தான்.
இந்த சீரியல் மூலம் மீனாட்சி ஆக ஒவ்வொரு தமிழ் குடும்பங்களிலும் வாழக்கூடிய பெண்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியலில் மிகவும் பிரபலமான இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசனில் ஹீரோயினியாக நடித்து பெரும்பாலான ரசிகர்களை தன்வசம் இழுத்தார்.
சீரியலோடு நின்றுவிடாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். ரசிகர்களோடு எப்போதும் ஒரு டச்சில் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக கொண்டிருந்தார். இவர் இன்ஸ்டால் பக்கம் மட்டுமல்லாமல் பேஸ்புக் பக்கமும் ரசிகர்களை உருவாக்கி அவரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது விடுமுறை நாட்களை இலங்கையில் கொண்டாடி வரும் இவர் ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
