Tamilnadu
பிக் பாஸ் சீசன் 7…! அதிரடியாக களமிறங்கும் 9 பெண் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா…? வெளியான இறுதி லிஸ்ட் இதோ….!
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. திரு.கமல்ஹாசன் அவர்கள் தொகுப்பாளராக இருந்து வந்ததே இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதுவரை 6 சீசன்கள் கடந்திருக்கும் பிக் பாஸ் தற்போது ஏழாவது சீசனை எதிர்நோக்கி செல்கிறது. கடந்த சீசனில் அசிம் ,தனலட்சுமி, ஜனனி, ஷிவின் ,விக்ரமன் ஆகிய போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடியது நாம் அனைவரும் அறிந்ததே .
கடந்த ஆறாவது சீசனில் அசிம் முதலிடத்திலும், விக்ரம் இரண்டாம் இடத்தையும், ஷிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். தற்பொழுது ஒளிபரப்பாகவிருக்கும் ஏழாவது சீசனில் யார் உள்ளே வரக்கூடும் என்பது பற்றி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த 7 வது சீசன் வரும் இன்று மாலை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இதில் கலந்து கொள்ளவுள்ள 9 பெண் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி ஐஷு, விசித்ரா, ரவீனா, பூர்ணிமா ரவி, ஜோவிகா, வினுஷா தேவி, அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், அனன்யா ராவ் கலந்து கொள்ள உள்ளனர்.
1.விசித்ரா:
அதன்படி குக் வித் கோமாளி விசித்ரா, வெள்ளித்திரையில் பிரபலமான இவர் தற்பொழுது சின்னத்திரையிலும் கால்பதித்து கலக்கி வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
2.வினுஷா:
‘பாரதி கண்ணம்மா’வில் கண்ணம்மாக ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதைதொடர்ந்து இவர் தற்பொழுது வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.
3.ரவீனா தாஹா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. இதைத்தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகிறார்.
4.அனன்யா ராவ்:
பிக் பாஸ் ஓ.டி.டி.யில் டைட்டில் வென்ற பாலாஜி முருகதாசின் ஃபேமிலி ஃப்ரண்ட் அனன்யா ராவ் என்பவர். இவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.
5.ஐஷு:
பிக் பாஸ் அமீரை எடுத்து வளர்த்த தம்பதியினரின் மகள் தான் ஐஷு. அமீர் கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருந்தார். இதைத்தொடர்ந்து இவர் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் செல்ல உள்ளார்.
[irp]
6.அக்ஷயா உதயகுமார்:
இவர் லவ் டுடே படத்தில் இவானாவின் தங்கையாக நடித்தவர். இவரும் பிக் பாஸில் வீட்டிற்குள் செல்லும் பெண் போட்டியாளர்களில் ஒருவர்.
7.பூர்ணிமா ரவி:
யு டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் நடிகை பூர்ணிமா ரவி. இவர் சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி தற்பொழுது மாடலாக நுழைந்து வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகிறார்.
[irp]
8. ஜோவிகா:
நடிகை வனிதாவின் மூத்த மகள் தான் ஜோவிகா. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லவிருப்பதை நடிகை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு வெளியிட்டு கூறியிருந்தார்.
9.மாயா கிருஷ்ணன்:
ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானவில் வாழ்க்கை’ படத்தில் நடிப்பைத் தொடங்கிய மேடை நாடகக் கலைஞர் மாயா கிருஷ்ணன். இதைத்தொடர்ந்து ‘மகளிர் மட்டும்’,’வேலைக்காரன்’, ‘2.0’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். கமலின் ‘விக்ரம்’ படத்தில் நடித்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போது விஜய்யின் ‘லியோ’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஐவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.
[irp]
