பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட…. பிரபல சீரியல் நடிகர்…. அடடே இந்த சீரியல் நடிகரா!!! – cinefeeds
Connect with us

BIGG BOSS

பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட…. பிரபல சீரியல் நடிகர்…. அடடே இந்த சீரியல் நடிகரா!!!

Published

on

விஜய் டிவி சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் சீரியல்  ‘ பாண்டியன் ஸ்டோர்ஸ்’  இந்த சீரியலில் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் சரவணன்.இவர் சென்னையில் உள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

பின்னர் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றார். சிறுவயதிலிருந்தே  நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த இவர் பள்ளி, கல்லூரி நாட்களில் பல கலாச்சார நிகழ்ச்சிகளிலும் நாடகப் போட்டிகளிலும் பங்கேற்றார்.அதை தொடர்ந்து டிக் டாக் ஆப் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தார். இதன் மூலமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’  சிரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் பிக் பாஸ் சீசன் 7 மிகவும் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் 13-வது போட்டியாளராக நடிகர் சரவணன் விக்ரம் நுழைந்திருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் வீட்டை எவ்வாறு கையாள போகிறார் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in