TTF வாசன் அறிமுகமாகும் முதல் திரைப்படம்… வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… வைரல்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

TTF வாசன் அறிமுகமாகும் முதல் திரைப்படம்… வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… வைரல்…!!

Published

on

கோவை மாவட்டத்தை சேர்ந்த TTF வாசன் அதிவேக பைக் ஓட்டி. இவர் பைக் ஓட்டும் வீடியோவை லைவாக யூடிபில் பதிவு செய்து வருவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதேசமயம் பலமுறை போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல்துறையினர் இவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணம் என பலரும் இவரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று TTF வாசன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் நடிக்கும் முதல் திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அந்த திரைப்படத்திற்கு மஞ்சள் வீரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் போஸ்டரில் கையில் சூலத்துடன் பைக்கில் வீலிங் செய்வது போல உள்ளது. இந்த திரைப்படத்தை செல்வம் என்பவர் இயக்க உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் ஆரம்பம் ஆகின்றது என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்கும் மற்ற பிரபலங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in