JUSTIN: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

JUSTIN: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Published

on

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு, தற்போது நடைபெற்று வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளே முதன்மையான காரணம் எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும் வரை தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாத சூழலில் அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே வார்டு மறுவரையறை செய்ய முடியும் என்றும், அதன் பின்னரே பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைகள் இறுதி செய்யப்பட இயலும் என்றும் அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டது. இந்த நடைமுறைகள் அனைத்தும் முறைப்படி நிறைவடைந்த பிறகே ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடியும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

தமிழகத்தின் 37 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி பாஸ்கரன் என்பவர் தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசும், மாநில தேர்தல் ஆணையமும் 3 வாரங்களுக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in