ஸ்டாலின் முதல் திரை பிரபலங்கள் வரை ஒன்று கூடி கலை கட்டிய சென்னை சேப்பாக்கம்…. விரேந்திர சேவாக்கிடம் கைக்குலுக்கிய சூரி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்டாலின் முதல் திரை பிரபலங்கள் வரை ஒன்று கூடி கலை கட்டிய சென்னை சேப்பாக்கம்…. விரேந்திர சேவாக்கிடம் கைக்குலுக்கிய சூரி…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

Published

on

16வது ஐபிஎல் போட்டிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இந்த போட்டியின் 31 வது நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது.

மாலை 3.30 மணி அளவில் சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

Advertisement

இதில் சிஎஸ்கே அணி 5 வெற்றி மற்றும் மூன்று தோல்வியுடன் பத்தாவது புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

இந்த ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை மூன்று ஆட்டங்கள் முடிந்துள்ளது. அதில் சிஎஸ்கே இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்த மூன்று போட்டிகளுமே இரவு 7.30 மணி அளவில் தொடங்கியது. ஆனால் நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.

இதனை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காலையிலிருந்து ரசிகர்கள் பலரும் திரண்டனர். பிற்பகல் 1.30 மணி அளவில் ரசிகர்கள் ஸ்டேடியத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

அதன்படி நேற்று போட்டியை காண முதல்வர் ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு நேரில் சென்று இருந்தார். பொதுவாக வேஷ்டி சட்டையில் காட்சியளிக்கும் ஸ்டாலின் நேற்றைய வித்தியாசமாக இருந்தார்.

கூலிங் கிளாஸ், மற்றும் டி-ஷர்ட் அணிந்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். ஸ்டாலின் மட்டுமல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் அங்கு ஒன்று கூடினர்.

Advertisement

அதாவது நடிகை ஐஸ்வர்யா தத்தா, சீரியல் நடிகை ரவீனா, அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் பிரபலங்கள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அவரின் அண்ணன் மணிகண்டன்,நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலரும் ஸ்டேடியத்திற்கு வருகை தந்தனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சூரி மும்பையில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஸ்டூடியோ விற்கு சென்று இருந்தார்.

Advertisement

அங்கு விரேந்திர சேவாக் நேரில் சந்தித்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in