“எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் சிக்காதீங்க” அவங்க பிளான் இதுதான்… எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் சிக்காதீங்க” அவங்க பிளான் இதுதான்… எம்.எல்.ஏ-க்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி எச்சரிக்கை..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை முடக்க திமுக தொடர்ந்து முயற்சித்து வருவதாக, நவம்பர் 11, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாக கூறப்படுகிறது. ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபகாலமாகத் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளைத் தொடர்ந்து இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தவெக எம்.எல்.ஏ-க்களைச் சிக்கவைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வலையை விரித்து வருவதாகவும், அந்த ‘டிராப்பில்’ யாரும் மாட்டிக்கொள்ளாமல் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, துணை சபாநாயகர் எம். ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் ஆகியோர் மீதான புகார்கள் அரசியலில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள சூழலில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement

அதே சமயம், பொதுவெளியில் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தவறான வழியில் செல்லும் எம்.எல்.ஏ-க்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக எச்சரித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in