LATEST NEWS
CSK போட்டியை காண சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்த திரை பிரபலங்கள்…. திக்குமுக்காடி போன ரசிகர்கள்…. வெளியான புகைப்படங்கள்….!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது 16வது சீசன் ஐபிஎல் போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
அங்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை காண வரிசையாக சினிமா பிரபலங்கள் வந்து நேரில் கண்டு களித்து செல்கின்றனர்.
குறிப்பாக சிஎஸ்கே மேட்ச் ஐ காண பலரும் வந்து ஆதரவு அளிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ், திரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டிகளை கண்டு ரசித்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை காண நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட பலரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்தனர்.
அவர்கள் அனைவரும் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். அந்த புகைப்படங்களை அவர்களே இணையத்தில் பகிர்ந்த நிலையில் ரசிகர்களும் வைரலாக்கினர்.
நடிகர் தனுசு உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் கிரிக்கெட்டை பார்த்த காட்சிகள் ட்விட்டரில் வைரலானது.
இதனைப் போலவே நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சிஎஸ்கே போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
ஆனால் ரசிகர்கள் பலரும் போட்டியை கவனிக்காமல் நயன்தாராவை வச்சக் கண் வாங்காமல் கண்டு ரசித்தனர்.
இதனைப் போலவே நடிகை நிவேதா பெத்துராஜ், நடிகை வரலட்சுமி, குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின், நடிகை மிருணாளினி, நடிகை யாஷிகா உள்ளிட்ட பலரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்தனர்.
இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்றது.
போட்டி ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற மறுபக்கம் திரைப்படங்கள் பலரும் சென்னை சேப்பாக்கத்தில் குவிந்தனர். தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
