LATEST NEWS
தந்தையர் தின ஸ்பெஷல்…. அப்பாவோடு எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படத்தை பகிர்ந்த சினிமா பிரபலங்கள்… சிறப்பு தொகுப்பு..!!
உலகம் முழுவதும் நேற்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். அது குறித்த ஒரு சிறிய தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
விக்னேஷ் சிவன்:
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். இதனிடையே தந்தையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் முதல் முறையாக தனது இரண்டு குழந்தைகளையும் கையில் ஏந்திய அழகிய புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன்:
புஷ்பா திரைப்படத்தின் ஹீரோவான அல்லு அர்ஜுன் அனைவருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்ட உலகின் சிறந்த தந்தைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் என தனது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்:
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சிறுவயதில் தந்தையுடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படத்தை பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
அனுஷ்கா:
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையான அனுஷ்கா செட்டி தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான செல்பி புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அட்லீ:
பிரம்மாண்ட இயக்குனரான அட்லி இந்த வருடம் தனது முதல் தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளார். அவருக்கும் மனைவி பிரியாவுக்கும் கடந்த ஜனவரி மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில் ஜாலியாக குழந்தையுடன் விளையாடும்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உலகிலேயே நீதான் சிறந்த தந்தை என பிரியா அழகிய புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.
மாளவிகா மோகன்:
பிரபல நடிகையான மாளவிகா மோகனன் தனது தந்தையுடன் எடுத்த ஒரு அழகான புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகை சினேகா:
தமிழ் சினிமாவில் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ள சினேகா தனது தந்தைக்கு முத்தமிடும் ஒரு அழகிய புகைப்படத்தை வெளியிட்டு பிரசன்னா தனது குழந்தைகளுடன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமார்:
பிரபல நடிகர் ஆன சரத்குமாரின் மகளான வரலட்சுமி தனது தந்தை சரத்குமாரை கட்டி அணைத்தபடி எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வால்:
நடிகை காஜல் அகர்வால் தனது கணவரும் மகனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அதே சமயம் தனது தந்தையுடன் அவரது சகோதரியும் இவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திரஜா ரோபோ சங்கர்:
பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது தந்தையுடன் எடுத்த ஒரு அழகிய புகைப்படத்தை பதிவிட்டு இந்த தந்தையர் தினம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது, என்னுடைய தந்தை மீண்டும் அதே வலிமையோடு வந்துவிட்டார் என பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி:
நடிகர் ஜெயம் ரவி இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் என்ற இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டார். தற்போது ஜெயம் ரவி தன்னுடைய குழந்தைகள் மற்றும் தந்தையுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சதீஷ்:
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகரான சதீஷ் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட ஒரு க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ்:
தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரகாஷ்ராஜ் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டு அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் கருணாஸ்:
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த கருணாஸ் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
