காமெடியன் TO நடிகன்…. குக் வித் கோமாளி புகழின்…. பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

காமெடியன் TO நடிகன்…. குக் வித் கோமாளி புகழின்…. பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ்.

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவரின் சொந்த ஊர் கடலூர்.

Advertisement

பிரசாத் ஸ்டூடியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்தார்.

அதன் பிறகு பானா காத்தாடி திரைப்படத்தில் நடித்த உதயராஜ் பார்த்து ஒரு நடிகனாக அடையாளம் கண்டார். இவரின் செயல்பாடுகளை கவனித்த அவர் கலக்கப்போவது சீசன் 6 ஆடிஷனில் பங்கேற்க கூறினார்.

Advertisement

ஆனால் அதில் பங்கேற்ற புகழ் முதலில் எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு கம்ப்யூட்டர் சர்வீஸ் மற்றும் வாட்டர் வாஷ் என இருந்த புகழுக்கு சிரிப்புடா என்ற நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பைத் தொடர்ந்து சிறிய சிறிய கேட்டப்களில் நடித்து வந்த இவருக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் லேடி கெட் அப் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் மனதை கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தன.

Advertisement

இவர் நடிப்பில் என்ன சொல்லப் போகிறாய்,சபாபதி உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது விஜய் அருண் படம், விஜய் சேதுபதி படம் என பிசியாக நடித்து வருகின்றார்.

அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் அண்மையில் தனது 5 வருட காதலியை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

தற்போது குக் வித் கோமாளி புகழின் அன்சின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in