அடி ஆத்தி எம்புட்டு..! எம்பி கதிர் ஆனந்த் வீட்டு விசேஷத்தில் கழுத்து நிறைய நகைகளுடன் குத்தாட்டம் போட்ட திமுக நிர்வாகி… வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடி ஆத்தி எம்புட்டு..! எம்பி கதிர் ஆனந்த் வீட்டு விசேஷத்தில் கழுத்து நிறைய நகைகளுடன் குத்தாட்டம் போட்ட திமுக நிர்வாகி… வைரலாகும் வீடியோ..!!

Published

on

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகள் திருமண விழாவில், அக்கட்சியின் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஏராளமான தங்க நகைகளை அணிந்து கொண்டு திரைப்பட பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஆடம்பரமாகக் காட்சியளித்த அவர், மேடையில் உற்சாகமாக ஆடிய இந்த நடன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் மத்தியில் எளிய முறையில் இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிதி ஒருவர், இவ்வாறு அளவுக்கு அதிகமான தங்க நகைகளைப் பூட்டிக்கொண்டு பொதுவெளியில் நடனமாடியது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்த ஆடம்பர நடன வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in