பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கனா காணும் காலங்கள் தீபிகா – ராஜா வெற்றி பிரபு திருமணம்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த கனா காணும் காலங்கள் தீபிகா – ராஜா வெற்றி பிரபு திருமணம்…. வெளியான அழகிய புகைப்படங்கள்….!!

Published

on

விஜய் டிவியில் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர் தான் கனா காணும் காலங்கள்.

தற்போது புது வடிவில் நவீன முறையில் சமகால பள்ளி கலைக்களத்தில் கதை அமைத்து கனா காணும் காலங்கள் இணைய தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

முதல் சீசனை போலவே தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த தொடரில் பரத், சங்கீதா, அரவிந்த் ஜெய் ஜு, ராஜா வெற்றி பிரபு, இர்பான், தேஜா வெங்கடேஷ், தீபிகா வெங்கடாசலம், ஆஷிக் கோபிநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Advertisement

இந்த தொடரில் நடிகர்கள் தீபிகா வெங்கடாசலம் மற்றும் ராஜா வெற்றி பிரபு ஆகியோர் அபி மற்றும் கௌதம் வேடத்தில் நடித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கடந்து சில நாட்களாக பல செய்திகள் உலா வந்தன.

Advertisement

இதனைத் தொடர்ந்து தீபிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலை ரசிகர்களிடம் தெரிவித்தார்.

தனது நண்பரும் சக நடிகருமான ராஜா வெற்றியை திருமணம் செய்ய இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.

Advertisement

அதே சமயம் ராஜா வெற்றி பிரபுவுடன் நிச்சயதார்த்தத்தையும் அறிவித்துள்ளார். நாங்கள் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் என்ற தலைப்புடன் அவர்கள் இருவரின் கட்டைவிரல் ரேகையை கிரிம்சன் சிவப்பு நிறத்தில் இதை அடையாளமாக உருவாக்குவதை காட்டும் போஸ்டருடன் அவர் சமீபத்தில் பகிர்ந்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமண சடங்குகள் குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

Advertisement

இந்நிலையில் தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபுவின் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது.

இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.

Advertisement

இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in