LATEST NEWS
BREAKING: வணிக UPI பரிவர்த்தனைகளுக்கான 0.4% கட்டண விதிப்பு தள்ளிவைப்பு – ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு..!!
ரூ.2,000க்கு மேற்பட்ட UPI வணிகப் பணப் பரிவர்த்தனைகளுக்கான 0.4% கட்டணம் விதிக்கும் நடைமுறை தள்ளி வைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. வணிக ரீதியிலான இந்த யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய பண்டிகைக் கால சூழலைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை ஒன்றிய அரசு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பின்படி, யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கான இந்த கட்டண நடைமுறை தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகே அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை தடையின்றி மேற்கொள்வதற்கும், பண்டிகை கால வணிக பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த தற்காலிக ஒத்திவைப்பு முடிவு தற்போதைய பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
