VIDEOS
நீங்க பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா இல்ல, அதுக்கு வந்தீங்களா?…. ராபர்ட் மாஸ்டரை கதி கலங்க வைத்த ஜனனி…. கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிபி ரோஸ்ட் என்ற டாஸ்க் நேருக்கு நேர் போட்டியாளர்கள் இருவர் கேள்வியை கேட்க வேண்டும். அப்படி ராபர்ட் மாஸ்டரை இலங்கை பெண் போட்டியாளரான ஜனனி ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதாவது நீங்க பிக் பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா அல்லது சுற்றுலாவுக்கு வந்தீங்களா என பட்டென கலாய்த்துள்ளார்.
அதற்கு சக போட்டியாளர்களும் குறிப்பாக ரட்சிதா விழுந்து விழுந்து சிரித்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரட்சிதா பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தா? இப்படித்தான் கேட்பாங்க என கலாய்த்து வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Day37 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/FBL9qEC2WW
— Vijay Television (@vijaytelevision) November 15, 2022
