LATEST NEWS
புதிய பிசினஸ் தொடங்கிய இயக்குனர் அமீர்…. குடும்பத்துடன் திறப்பு விழாவிற்கு வந்த வெற்றிமாறன்…. வைரலாகும் புகைப்படங்கள்…!!!
பொதுவாகவே சினிமா பிரபலங்கள் பலரும் நடிப்பை தாண்டி சைடு பிசினஸ் கொஞ்சம் செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் சினிமாவையே சைடு பிசினஸ் ஆக வைத்துள்ளனர்.
இளைய தளபதி விஜய் முதல் நயன்தாரா வரை அனைவருமே நடிப்பை தாண்டி பல சைடு பிசினஸ் செய்து வருகிறார்கள்.
அதன்படி தற்போது இயக்குனர் அமீர் 4 am Coffee & Kitchen என்ற நிறுவனத்தை இன்று தொடங்கியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அந்த நிறுவனத்தை தொடங்கி வைத்தனர்.
நடிகர் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானவர்தான் அமீர்.
அதன் பிறகு கார்த்தி நடித்து வெளியான பருத்திவீரன் திரைப்படத்தை இவர் இயக்கிய நிலையில் இன்னும் தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் தலைநிமிர்ந்து நிற்கிறது.
இப்படி அடுத்தடுத்து பல திரைப்படங்களை இயக்கி வந்த அமீர் சில படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடித்திருப்பார். இப்படி பல திரைப்படங்களில் பிசியாக நடித்தும் பல திரைப்படங்களை இயக்கியும் வந்த அமீர் தற்போது புது பிசினஸை தொடங்கியுள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்ட நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி மற்றும் மாயாஜால் சினிமாஸ் அருகே இவர் புதிய ரெஸ்டாரன்ட் தொடங்கியுள்ளார்.
இன்று நடைபெற்ற திறப்பு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
