கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வெளியான அழகிய புகைப்படங்கள்…!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ்.

கடந்த 2006 ஆம் ஆண்டு திரையுலகில் நுழைந்த இவர் முதலில் நடிகராக வேண்டும் என்று திட்டமிட்டார்.

Advertisement

அதன் பிறகு இயக்குனர் ராமுடன் இணைந்து உதவி இயக்குனராக மூன்று திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதாவது கற்றது தமிழ், தங்கமீன்கள் மற்றும் தரமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் 2018 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார்.

Advertisement

தனது முதல் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கி வெளியிட்டார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் குவித்தது.

இந்த திரைப்படத்தில் கதிர், ஆனந்தி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

Advertisement

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை உருவாக்கி மாபெரும் வெற்றி பெற்றார்.

இந்த திரைப்படத்தின் வெற்றி இவரை திரையுலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார்.

Advertisement

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in