LATEST NEWS
இயக்குனர் நெல்சனின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய புகைப்படம்…!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நெல்சன். இவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் மிக வெற்றி பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் திரைப்படத்தை இயக்கினார்.
இந்தத் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
