பிரம்மாண்டமாக நடந்து முடிந்த KPY விக்னேஷ் கார்த்திக்கின் வெட்டிங் ரிசப்ஷன்.. கலந்து கொண்ட பிரபலங்கள்.. வெளியான புகைப்படங்கள்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த KPY விக்னேஷ் கார்த்திக்கின் வெட்டிங் ரிசப்ஷன்.. கலந்து கொண்ட பிரபலங்கள்.. வெளியான புகைப்படங்கள்..!!

Published

on

விஜய் டிவியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் விக்னேஷ் கார்த்தி. அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடி திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியதால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட கிங் ஆப் காமெடி சீசன் 1 நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சூரிய வணக்கம் என்ற நிகழ்ச்சியில் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினார்.

Advertisement

இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு பிக் FM என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். இவ்வாறு பல துறைகளில் பிஸியாக இருந்த இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த வாய்ப்பை வைத்து 2016 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் நட்பதிகாரம் 79 என்ற திரைப்படத்தில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானார்.

அதன் பிறகு சோலா பூரி மற்றும் குற்றம் நடந்தது என்ன உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். பிறகு 2018 ஆம் ஆண்டு வெளியான ஏண்டா தலையில எண்ண வைக்கல என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் என்று அவதாரத்தை எடுத்தார்.

Advertisement

வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து திட்டம் இரண்டு மற்றும் அடியே போன்ற பல திரைப்படங்களை இவர் இயக்கினார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான அடியே என்ற திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் வெற்றி பெற இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விக்னேஷ் கார்த்திக் ஒரு பெண்ணை திருமணம் முடித்துள்ளார்.

Advertisement

இவருக்கு நேற்று பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவரது திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் நிகழாகி வர புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in