LATEST NEWS
பாதியிலேயே கழட்டி விட்ட விஜய்.. 4 வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஹீரோவை வைத்து படம் இயக்கும் ஏஆர் முருகதாஸ்.. அவர் யார் தெரியுமா..??

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் முருகதாஸ். இவர் அஜித்தின் தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த இவர் அடுத்ததாக ரமணா திரைப்படம் மூலம் கேப்டன் விஜயகாந்த் உடன் கூட்டணி அமைத்தார்.
அந்த திரைப்படம் வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கினார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தன. இவர் இயக்கத்தில் கடைசியாக ரஜினியின் தர்பார் திரைப்படம் தான் திரைக்கு வந்தது.
அந்த படம் பெரிதாக கை கொடுக்காததால் மீண்டும் தன்னுடைய பேவரைட் நடிகரான விஜய்யுடன் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி அமைத்தார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் அது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது .
இதற்கான ஆரம்ப கட்டப் பணிகளை ஏ ஆர் முருகதாஸ் மேற்கொண்டு வந்த நிலையில் கதையில் திருப்தி இல்லை என்று கூறி ஏ ஆர் முருகதாஸை நீக்கிய விஜய் அவருக்கு பதிலாக நெல்சனுக்கு வாய்ப்பு வழங்கினார். அதன்படி நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் தான் பீஸ்ட்.
விஜய் படத்திலிருந்து பாதையில் கழட்டி விடப்பட்ட ஏ ஆர் முருகதாஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக தனது அடுத்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தார்.இந்த நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய ஏ ஆர் முருகதாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக தன்னுடைய அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதாவது சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் அடுத்ததாக இயக்க உள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.