LATEST NEWS
தங்க மீன்கள் சாதனா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்….!!!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் குழந்தை நட்சத்திரங்களுக்கு என்று தனி ஒரு இடம் உள்ளது. நடிகை பேபி ஷாலினி தொடங்கி தற்போதைய பேபி சாரா வரை எண்ணற்ற குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர்.
அதேசமயம் குழந்தை நட்சத்திரங்களாக இருந்த அனைவரும் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து விட்டனர்.
மக்கள் மனதில் இடம் பிடித்த குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர்தான் தங்க மீன்கள் சாதனா.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ராமு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பிறகு தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
இவர் இயக்கிய தங்க மீன்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் சாதனா.
இந்த திரைப்படத்திற்கு இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்பதற்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் மீண்டும் ராம இயக்கிய பேரன்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தேவர் பாடல் மற்றும் நடனத்திலும் சிறந்தவராக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்நிலையில் நடிகை சாதனாவின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
