தமிழ் சினிமாவில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?..

Published

on

ஒரு படத்திற்கு கதாநாயகன் ,கதாநாயகி ,வில்லன், போன்றவர்கள்  எவ்வளவு முக்கியமோ   அதே போன்று நகைச்சுவை நடிகர்களும்  முக்கியம் . அப்படி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை பற்றி இதில் காண்போம்.

1. யோகிபாபு:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் யோகி பாபு, இவர் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘யோகி’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர்  சுல்தான் ,கர்ணன், மண்டேலா, டிக்கிலோனா ,பிகில் ,கோமாளி, மிஸ்டர் லோக்கல் ,மான் கராத்தே ,பையா ,சூது கவ்வும், டாக்டர் ,வாரிசு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஒரு நாளைக்கு சுமார் 14 முதல் 18 லட்சமும் , ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாயும் சம்பளமாக பெறுகிறார்.

2.சந்தானம் :

Advertisement

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகர் சந்தானம் .இவர் தற்போது கதாநாயகனாக மாறி படங்களின் நடித்து வருகிறார் .இவர் பாஸ் என்கின்ற பாஸ்கரன் ,ஒரு கல் ஒரு கண்ணாடி ,கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் ஒரு நாளைக்கு 15 லட்சமும் ஒரு படத்திற்கு 5 கோடியும் என்று சம்பளம் பெறுகிறார்.

3. சூரி:

Advertisement

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்  நடிகர் சூரி. இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலமும்  மக்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,சுந்தர பாண்டியன், பாண்டியநாடு, ஜில்லா ,கடைக்குட்டி ,சிங்கம் ,ரஜினி முருகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்..இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்  25 லட்சம் முதல் 40 லட்சம் வரை.

4. ரெடின் கிங்ஸ்லி:

Advertisement

2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்  நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி.இவர் அண்ணாத்த ,பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்  தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை பானியின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை குறுகிய காலத்திலேயே பெற்றார் .இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 15 லட்சம் முதல் 25 லட்சம் வரை.

5. ஆர்.ஜே.பாலாஜி:

Advertisement

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கி தற்போது நடிகராக  நடித்து வருபவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இவர் ‘ஜென்’ படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார்.எதிர்நீச்சல் தீயா வேலை செய்யணும் குமாரு வாயை மூடி பேசவும் வடகறி வல்லினம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 10 முதல் 15 வரை.

6. மனோபாலா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மறைந்த நடிகர் மனோபாலா. இவர் காற்றின் மொழி, வேட்டையாடு, நண்பன், துப்பாக்கி, காஞ்சனா, மாப்பிள்ளை ,சிறுத்தை ,சிங்கம் ,ஆதவன் ,நினைத்தாலே இனிக்கும், சிலம்பாட்டம் ,அபியும் நானும் போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை.

Advertisement

7. வித்யுல்லேகா ராமன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகைகளில் ஒருவர்த நடிகை வித்யுல்லேகா ராமன். இவர் ராமன் புலி, வேதாளம் ,மாப்பிள்ளை சிங்கம், பவர் பாண்டி போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களின் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்  8 லட்சம் முதல் 10 லட்சம் வரை.

Advertisement

8. வடிவேலு:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் வடிவேலு. இவர் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டன் என்ற படத்தில் நடித்துள்ளார்.  சந்திரமுகி ,வின்னர், கிரி, போக்கிரி, தலைநகரம், மருதமலை போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்  8 முதல் 10 லட்சம் வரை.

Advertisement

9. கருணகுமாரன்:

2014 ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நகைச்சுவையின் நடிகர்  கருணகுமாரன். இவர் யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா, ஆடமா ஜெயிச்சோமடா, யான், உப்பு கருவாடுபோன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 5 முதல் 8 லட்சம் வரை .

Advertisement

10.கருணாஸ்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில்  ஒருவர் நடிகர் கருணாஸ். இவர் எந்திரன், ஆறுமுகம், மாசிலாமணி ,அயன், நேற்று இன்று நாளை , அட்டகாசம், திருடா திருடி, நந்தா போன்ற பல படங்களில் நடத்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் 3 முதல்5 லட்சம் வரை .

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in