LATEST NEWS
விஜயின் ஷாஜகான் பட நடிகை ரிச்சா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?…. குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வெளியான பல காதல் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அப்படி விஜய் நடித்த காதல் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் ஒன்றுதான் ஷாஜகான்.
கே எஸ் ரவி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரிச்சா நடித்திருப்பார். மணி ஷர்மா இசையமைப்பில் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தனர்.
அந்தத் திரைப்படத்தில் விஜயின் காதல் தோல்வியில் முடிந்தது போல் காட்டினாலும் அவருக்கு ஜோடியாக ரிச்சா சில காட்சிகளில் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து அவர் காதல் கிறுக்கன் மற்றும் சம்திங் சம்திங் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் திருமணம் மற்றும் குடும்பம் என செட்டிவிலான ரிச்சா அதன் பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார். இந்நிலையில் தற்போது ரிச்சா பலோட் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட ஷாஜகான் பட நடிகை ரிக்சாவா இது என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள் .
