மறைந்த நடிகர் மனோபாலா இயக்கிய படங்கள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு பட்டியல்…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் மனோபாலா இயக்கிய படங்கள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு பட்டியல்…!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் மனோபாலா. இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யனாக அவரின் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர்தான் மனோபாலா. அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

69 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பால் கடந்த 15 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் மனோபாலா இயக்கிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

ஆகாயத்தாமரை:

கடந்த 1982 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் மனோபாலா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Advertisement

நான் உங்கள் ரசிகன்:

கடந்த 1985 ஆம் ஆண்டு நடிகர் மோகன் மற்றும் ராதிகா நடிப்பில் இந்த திரைப்படத்தை மனோபாலா இயக்கியிருந்தார்.

Advertisement

பிள்ளை நிலா:

1985 ஆம் ஆண்டு இயக்குனர் மனோபாலா ராதிகா, நதியா மற்றும் மோகன் நடிப்பில் இந்த திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

பாரு பாரு பட்டினம் பாரு.

கடந்த 1986 ஆம் ஆண்டு இயக்குனர் மனோபாலா மோகன் நடிப்பில் இந்த திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

தூரத்து பச்சை

கடந்த 1987 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் நடிப்பில் இந்த திரைப்படத்தை இயக்குனர் மனோபாலா இயக்கினார்.

Advertisement

ஊர்க்காவலன்

கடந்த 1987 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ராதிகா மற்றும் ரகுவரன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் இயக்க இயக்குனர் மனோபாலா இந்த திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

என் புருஷன் எனக்கு மட்டும்தான்

கடந்த 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் இந்த திரைப்படத்தை மனோபாலா இயக்கினார்.

Advertisement

சிறைப் பறவை:

கடந்த 1987 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் இந்த திரைப்படத்தை மனோபாலா இயக்கினார்.

Advertisement

மல்லுவேட்டி மைனர்:

1990 ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் மற்றும் சீதா நடிப்பில் இந்த திரைப்படத்தை மனோபாலா இயக்கினார்.

Advertisement

மூடு மந்திரம்:

கடந்த 1989 ஆம் ஆண்டு நடிகர் பிரபு நடிப்பில் மனோபாலா இந்த திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

வெற்றி படிகள்

கடந்த 1991 ஆம் ஆண்டு மனோபாலா இந்த திரைப்படத்தை இயக்கினார்.

Advertisement

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்

கடந்த 1991 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் மனோபாலா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Advertisement

செண்பகத் தோட்டம்:

கடந்த 1992 ஆம் ஆண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற செண்பகத் தோட்டம் என்ற திரைப்படத்தை மனோபாலா இயக்கினார்.

Advertisement

முற்றுகை

கடந்த 1993 ஆம் ஆண்டு நடிகர் அருண்பாண்டியன், பானுப்ரியா மற்றும் ரஞ்சிதா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை மனோபாலா இயக்கியிருந்தார்.

Advertisement

பாரம்பரியம்

கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான பாரம்பரியம் என்ற திரைப்படத்தை நடிகர் மனோபாலா இயக்க சிவாஜி கணேசன், சரோஜாதேவி மற்றும் பாண்டியனாகியோர் நடித்திருந்தனர்.

Advertisement

கருப்பு வெள்ளை

கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான கருப்பு வெள்ளை என்ற திரைப்படத்தை இயக்குனர் மனோபாலா இயக்க இந்த படத்தில் ரஹ்மன், சுகன்யா மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருந்தனர்.

Advertisement

 

நந்தினி

Advertisement

கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான நந்தினி என்ற திரைப்படத்தை மனோபாலா இயக்க இதில் பிரகாஷ்ராஜ், சுகாசினி ஆகியோர் நடித்திருந்தனர்.

அன்னை

Advertisement

கடந்த 2000-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை மனோபாலா இயக்கியிருந்த நிலையில் இந்த படத்தில் பானுப்பிரியா மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

 

Advertisement

சிறகுகள்

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் ராதிகா மற்றும் விக்ரமாகிய ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மனோபாலா இயக்கியிருந்தார்.

Advertisement

நைனா

கடந்த 22 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம் தான் இது. இந்த திரைப்படத்தில் ஜெயராம் இரட்டை வேடத்தில் நடிக்க வடிவேலு மற்றும் பானுப்பிரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை மனோபாலா இயக்கியிருந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in